முன்னுரை (தொடர்ச்சி)

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/03/13/introduction/), நாம் நம்முடைய குருபரம்பரையைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தொடங்கினோம். periya perumaal azhwar-acharyas-ramanuja ஶ்ரிய:பதியான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி மற்றும் எண்ணிலடங்காத திவ்ய மஹிஷிகளுடனும் அநந்தன் கருடன் விஷ்வக்ஸேனர் முதலிய நித்ய ஸூரிகளுடனும் முக்தர்களுடனும் எண்ணிலடங்காத கல்யாண குணங்களை உடையவனாகவும் விளங்குகிறான். ஸ்ரீவைகுண்டம் என்கிற பரம்பதம் எல்லையில்லாத இன்பங்களை உள்ளடக்கியுள்ள இடம். ஆனால் எம்பெருமான் அங்கு ஆனந்தித்து இருக்கும்போதும், அவன் திருவுள்ளம் ஸம்ஸாரத்தில் துன்புறும் ஜீவாத்மாக்களையே எண்ணுகிறது. நித்யர் (ஸம்ஸாரத்தில் கர்மத்தால் ஒருபொழுதும் தள்ளப் படாதவர்கள்), முக்தர் (ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்டவர்கள்), பத்தர் (ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டுள்ளவர்கள்) ஆகிய மூன்று விதமான ஜீவாத்மாக்களும் எம்பெருமானிடம் பிதா-புத்ர ஸம்பந்தமும்,  உடையவன்-உடைமைப் பொருள் என்கிற ஸம்பந்தமும் பெற்று எம்பெருமானுக்குக் கீழ்ப்படிந்து இருக்கும் தன்மையைப் பெற்றவர்களே. இந்த ஸம்பந்தத்தின் காரணமாகவே, எம்பெருமான், பத்த ஜீவாத்மாக்களை ஸ்ரீவைகுண்டத்திற்குக் அழைத்துச் சென்று நிரந்தரமான கைங்கர்யத்தில் ஈடுபடுத்தத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறான். சாஸ்த்ரம் விளக்கும்படி ஒருவனுக்குத் தத்துவங்களைப் பற்றிய உண்மை அறிவு இருக்குமே ஆனால் அவன் மோக்ஷத்தை அடைகிறான். ரஹஸ்ய த்ரயத்தின் மூலமாக அத்தகைய உண்மை அறிவைத் தெளிவாக அடையலாம். ஜீவாத்மாவை இந்த ஸம்ஸாரத்தில் இருந்து விடுவித்து மோக்ஷத்துக்கு வழிகாட்டும் ரஹஸ்ய த்ரயத்தை உபதேசிப்பவன் ஆசார்யன். இந்த ஆசார்யன் என்னும் நிலையின் ஏற்றத்தை உணர்ந்தே எம்பெருமானும் ஆசார்யனாக இருக்க விரும்புகிறான்.  ஆகையாலேயே எம்பெருமானே நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் ப்ரதமாசார்யனாகத் திகழ்கிறான். எம்பெருமான் தானே ஆசார்யனாக மூன்று இடத்தில் நின்றுள்ளதை நம்முடைய பூர்வாசார்யர்கள் விளக்கியுள்ளனர்:

  • எம்பெருமான் பதரிகாஶ்ரமத்தில் தானே நாராயண ரிஷியாக அவதரித்து திருமந்திரத்தைத் தன்னுடைய அம்ஶமான நர ரிஷிக்கு உபதேசித்தான்.
  • ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் எம்பெருமான் த்வய மஹா மந்திரத்தை ஸ்ரீமஹாலக்ஷ்மியாகிய பெரிய பிராட்டியாருக்கு உபதேசித்து நம்முடைய குருபரம்பரையைத் தொடங்கிவைத்தான்.
  • எம்பெருமான் பார்த்தஸாரதியாக, குருக்ஷேத்திரத்தில் திருத்தேர்த்தட்டில் அர்ஜுனனுக்கு சரம ஶ்லோகத்தை உபதேசித்தான்.

குருபரம்பரை சித்திர வடிவில்: http://kaarimaaran.com/downloads/guruparambarai.jpg. திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாளும் பெரியபிராட்டியாரும் ஸ்ரீமந் நராயணனும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுமே. ஆகையால், பெரிய பெருமாள் தொடக்கமாக, நம்முடைய ஓராண் வழி குருபரம்பரை இந்த வரிசையில் உள்ளது:

  1. பெரிய பெருமாள்
  2. பெரிய பிராட்டியார்
  3. ஸேனை முதலியார்
  4. நம்மாழ்வார்
  5. நாதமுனிகள்
  6. உய்யக்கொண்டார்
  7. மணக்கால் நம்பி
  8. ஆளவந்தார்
  9. பெரிய நம்பி
  10. எம்பெருமானார்
  11. எம்பார்
  12. பட்டர்
  13. நஞ்சீயர்
  14. நம்பிள்ளை
  15. வடக்கு திருவீதிப் பிள்ளை
  16. பிள்ளை லோகாசார்யர்
  17. திருவாய்மொழிப் பிள்ளை
  18. அழகிய மணவாள மாமுனிகள்

ஆழ்வார்களும் மேலும் பல ஆசார்யர்களும் ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் அமைந்துள்ளார்கள். ஆழ்வார்கள் வரிசை க்ரமத்தில்:

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசை ஆழ்வார்
  5. மதுரகவி ஆழ்வார்
  6. நம்மாழ்வார்
  7. குலசேகராழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கை ஆழ்வார்

ஓராண் வழியில் இல்லாத ஏனைய ஆசார்யர்கள் (மேலும் பலர் உள்ளனர்):

  1. செல்வ நம்பி
  2. குருகைக் காவலப்பன்
  3. திருக்கண்ணமங்கை ஆண்டான்
  4. திருவரங்கப்பெருமாள் அரையர்
  5. திருக்கோஷ்டியூர் நம்பி
  6. பெரிய திருமலை நம்பி
  7. திருமாலை ஆண்டான்
  8. திருக்கச்சி நம்பி
  9. மாறனேரி நம்பி
  10. கூரத்தாழ்வான்
  11. முதலியாண்டான்
  12. அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
  13. கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான்
  14. கிடாம்பி ஆச்சான்
  15. வடுக நம்பி
  16. வங்கிபுரத்து நம்பி
  17. சோமாசியாண்டான்
  18. பிள்ளை உறங்கா வில்லி தாஸர்
  19. திருக்குருகைப்பிரான் பிள்ளான்
  20. கூர நாராயண ஜீயர்
  21. எங்களாழ்வான்
  22. அநந்தாழ்வான்
  23. திருவரங்கத்து அமுதனார்
  24. நடாதூர் அம்மாள்
  25. வேத வ்யாஸ பட்டர்
  26. ச்ருத ப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன ஸூரி)
  27. பெரியவாச்சான் பிள்ளை
  28. ஈயுண்ணி மாதவப் பெருமாள் (நம்பிள்ளையின் ஈடு மஹா வ்யாக்யானத்தின் சரித்திரத்தையும் உள்ளடக்கியது)
  29. ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள்
  30. நாலூர் பிள்ளை
  31. நாலூராச்சான் பிள்ளை
  32. நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்
  33. பின்பழகிய பெருமாள் ஜீயர்
  34. அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
  35. நாயனாராச்சான் பிள்ளை
  36. வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்
  37. கூர குலோத்தம தாஸர்
  38. விளாஞ்சோலைப் பிள்ளை
  39. வேதாந்தாசார்யர்
  40. திருநாராயணபுரத்து ஆய் ஜநந்யாசார்யர்

மாமுனிகள் காலத்திலும், அவருக்கு பிற்பட்ட காலங்களிலும் பல சிறந்த ஆசார்யர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் (மேலும் பலர் உள்ளனர்):

  1. பொன்னடிக்கால் ஜீயர்
  2. கோயில் கந்தாடை அண்ணன்
  3. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்
  4. பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்
  5. எறும்பியப்பா
  6. அப்பிள்ளை
  7. அப்பிள்ளார்
  8. கோயில் கந்தாடை அப்பன்
  9. ஸ்ரீபெரும்பூதூர் ஆதி யதிராஜ ஜீயர்
  10. அப்பாச்சியாரண்ணா
  11. பிள்ளை லோகம் ஜீயர்
  12. திருமழிசை அண்ணாவப்பங்கார்
  13. அப்பன் திருவேங்கட ராமாநுஜ எம்பார் ஜீயர்

மேல் வரும் பதிவுகளில், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களைப் பற்றி முடிந்த அளவு அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/08/17/introduction-contd/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

This entry was posted in Introduction on by .

About sarathyt

Disciple of SrImath paramahamsa ithyAdhi pattarpirAn vAnamAmalai jIyar (29th pattam of thOthAdhri mutt). Descendant of komANdUr iLaiyavilli AchchAn (bAladhanvi swamy, a cousin of SrI ramAnuja). Born in AzhwArthirungari, grew up in thiruvallikkENi (chennai), lived in SrIperumbUthUr, presently living in SrIrangam. Learned sampradhAyam principles from (varthamAna) vAdhi kEsari azhagiyamaNavALa sampathkumAra jIyar swamy, vELukkudi krishNan swamy, gOmatam sampathkumArAchArya swamy and many others. Full time sEvaka/servitor of SrIvaishNava sampradhAyam. Engaged in translating our AzhwArs/AchAryas works in Simple thamizh and English, and coordinating the translation effort in many other languages. Also engaged in teaching dhivyaprabandham, sthOthrams, bhagavath gIthA etc and giving lectures on various SrIvaishNava sampradhAyam related topics in thamizh and English regularly. Taking care of koyil.org portal, which is a humble offering to our pUrvAchAryas. koyil.org is part of SrI varavaramuni sambandhi Trust (varavaramuni.com) initiatives.

19 thoughts on “முன்னுரை (தொடர்ச்சி)

  1. பிங்குபாக்: 2015 – Mar – Week 3 | kOyil – srIvaishNava Portal for Temples, Literature, etc

  2. பிங்குபாக்: திவ்ய தம்பதி | ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை

  3. THIRU NANDA PATHANGI

    ஓராண் வழியில் இல்லாத ஏனைய ஆசார்யர்கள் (மேலும் பலர் உள்ளனர்)
    74 simhasanathypathy and their respective ஓராண் வழியில் ஆசார்யர்கள் (மேலும் பலர் உள்ளனர்). It will not be like the one you had stated starting from Embar and ending with Mamunugal. Each paramparai among the 74 will have its own list of Acharyas.

    1. sarathyt Post author

      Generally, in srIvaishNava paribhAshai, specifically in thennAchArya sampradhAyam, “OrAN vazhi” term is used to indicate srIranganAthan to mAmunigaL. This is common practice as heard from scholars. Each simhAsanAdhipathi ofcourse has his own descendants who are continuing the rich tradition until today.
      adiyen ramanuja dasan

  4. பிங்குபாக்: ദിവ്യ ദമ്പതി | ശ്രീവൈഷ്ണവ ഗുരുപരമ്പര

  5. பிங்குபாக்: ദിവ്യ ദമ്പതി | ശ്രീവൈഷ്ണവ ഗുരുപരമ്പര

  6. பிங்குபாக்: 2015 – May – Week 2 | kOyil – srIvaishNava Portal for Temples, Literature, etc

  7. பிங்குபாக்: 2015 – May – Week 3 | kOyil – srIvaishNava Portal for Temples, Literature, etc

  8. Govindarajans

    நல்லதொருஈச்வரகைங்கர்யம்,இன்றையஇளம்வைணவர்கள்தங்களைஇந்தவலைததில்இணைத்துக்கொண்டுவைணவத்தின்பெருமையைஉலகலாவச்செஇய்யவேண்டும்.தொடரட்டும்தங்கள்திருப்பணிதிருவேங்கடவன்திருவாருளால்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s