ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/06/07/nathamunigal/) நாதமுனிகளை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.
உய்யக்கொண்டார் – திருவெள்ளறை
உய்யக்கொண்டார் – ஆழ்வார்திருநகரி
திருநக்ஷத்ரம்: சித்திரை மாஸம், கார்த்திகை நக்ஷத்ரம்
அவதார ஸ்தலம்: திருவெள்ளறை
ஆசார்யன்: நாதமுனிகள்
ஶிஷ்யர்கள்: மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகபெருமாள் நங்கை.
புண்டரீகாக்ஷர், திருவெள்ளறை (ஶ்வேதகிரி) என்ற திவ்ய தேசத்தில் அவதரித்தார். இவருடைய பெற்றோர்கள் அந்த திவ்ய தேசத்து எம்பெருமான் திருநாமத்தையே இவருக்கு வைத்தார்கள். இவருக்கு பத்மாக்ஷர் என்ற திருநாமமும் உண்டு, ஆனால் உய்யக்கொண்டார் என்ற திருநாமமே இன்றளவும் ப்ரசித்தியாக உள்ளது.
உய்யக்கொண்டாரும், குருகைக் காவலப்பனும் நாதமுனிகளுடைய முக்கியமான அந்தரங்க ஶிஷ்யர்களாக இருந்தார்கள். நாதமுனிகள் நம்மாழ்வாரிடமிருந்து சகல அர்த்த விசேஷங்களைப் பெற்ற பிறகு, காட்டு மன்னார் கோவிலுக்கு வந்து நமது ஸம்ப்ரதாயத்தைப் பரப்ப ஆரம்பித்தார். அஷ்டாங்க யோகத்தை குருகைக் காவலப்பனுக்குக் கற்றுக்கொடுத்தார். அஷ்டாங்க யோகத்தின் மூலம் ஒருவர் உடல் உபாதைகளைப் பற்றி யோசிக்காமல், எந்த தடையும் இல்லாமல் எம்பெருமானை அனுபவிக்க முடியும். நாதமுனிகள், உய்யக்கொண்டாரிடம் உமக்கும் அஷ்டாங்க யோகத்தை கற்றுக்கொள்ள ஆசை உண்டோ? என்று கேட்க, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்று கூறினார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் “அறியாமையால் பலரும் இந்த ஸம்ஸாரத்தில் இருந்து கஷ்டப்பட, அடியேன் மட்டும் எப்படி தனியாக பகவத் அனுபவம் பண்ணமுடியும்” என்று கேட்டார். இதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து, அவருடைய பெருந்தன்மையை “இந்த வையம் உய்யக்கொண்டீரோ?” என்று பாராட்டி அருளிச்செயல் மற்றும் அதனுடைய சகல அர்த்தத்தையும் அவருக்குக் கற்றுக்கொடுத்தார். அன்றிலிருந்து அவருக்கு “உய்யக்கொண்டார்” என்ற திருநாமம் ப்ரஸித்தியானது. நாதமுனிகள் அஷ்டாங்க யோகம், அருளிச்செயல் மற்றும் அருளிச்செயலினுடைய விஶேஷ அர்த்தங்கள் அனைத்தையும் ஈஶ்வர முனியுடைய குமாரருக்கு (நாதமுனிகளுடைய திருப்பேரனாருக்கு) சொல்லிக்கொடுக்குமாறு உய்யக்கொண்டார் மற்றும் குருகைக் காவலப்பனுக்குக் கட்டளையிட்டார்.
நாதமுனிகளுக்குப் பிறகு, உய்யக்கொண்டார் தர்ஶன ப்ரவர்த்தகராக (நம் ஸம்ப்ரதாயத்தைப் பாதுகாத்துப் பரப்புபவர்) ஆனார். அவருடய ஶிஷ்யர்களுக்கு அருளிசெயல் மற்றும் சகல அர்த்த விசேஷங்களையும் சொல்லிக்கொடுத்தார். அவர் பரமபத்ததுக்கு செல்வதற்கு முன், மணக்கால் நம்பி (ப்ரதான அந்தரங்க ஶிஷ்யர்) அடுத்த தர்ஶன ப்ரவர்தகர் யார் என்று கேட்க, அவர் மணக்கால் நம்பியையே ஸம்ப்ரதாயத்தை வளர்க்குமாறு கூறினார். யமுனைத்துறைவரை அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகராக உருவாக்குமாறு கட்டளையிட்டார்.
உய்யக்கொண்டாருடைய தனியன்:
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பத பங்கஜே
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குலநாதாய தீமதே
உய்யக்கொண்டாருடைய வாழி திருநாமம்:
வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே
அடியேன் ரெங்க ராமானுஜம் ராமானுஜ தாஸன்
மேலே, அடுத்த ஆசார்யரான மணக்கால் நம்பியினுடைய பெருமைகளை அனுபவிப்போம்.
ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/08/24/uyyakkondar/
வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Pingback: srI puNdarIkAksha (uyyakkoNdAr) | AchAryas
Pingback: மணக்கால் நம்பி | guruparamparai thamizh