Monthly Archives: மார்ச் 2015

ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்)

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

கீழே நாம் பெரிய பெருமாளைப்பற்றியும் பெரிய பிராட்டியாரைப்பற்றியும் அநுபவிதோம். மேலே திவ்ய தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்ய த்விரத வக்ராத்யா‘ என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாவது ச்லோகத்தில், “நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை)  விலக்கிக் கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஸ்ரயிக்கிறேன்” என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரைத் தரிசிப்போம்.

ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்)

ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்)

திருநக்ஷத்திரம்: ஐப்பசி, பூராடம்

அருளிய சாஸ்திரம்: விஷ்வக்ஸேன ஸம்ஹிதை

இவரே நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட நித்யவிபூதியையும், லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்கிறார். ஸேனை முதல்வர், ஸேநாதிபதி, வேத்ரதரர், வேத்ரஹஸ்தர் என்று பல திருநாமங்கள் கொண்டவர். சூத்ராவதி என்று இவருடைய திவ்ய மஹிஷியின் திருநாமம். எம்பெருமானின் சேஷ ப்ரசாதத்தை முதலில் கொள்பவராதலால், இவருக்கு சேஷாசநர் என்ற திருநாமமும் உண்டு.

நாம் அநுபவித்து வரும் குருபரம்பரையின் மூன்றாவது ஆசார்யனாக விஷ்வக்ஸேனர் கொண்டாடப்படுகிறார். பெரிய பிராட்டியாரே இவருக்கு ஆசார்யனாக இருக்கிறாள். ஆழ்வார்கள் அனைவரும் இவருடைய சிஷ்யர்களாக இருக்கிறார்கள்.

எம்பெருமான் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணராய் என்பது போல், அவருளிய பரமபதமான நித்ய மற்றும் லீலா விபூதகளை தன் மஹிஷிகளுடன் ஆனந்தமாக அநுபவித்தார் என்று பூர்வாச்சார்யர்கள் மூலமாக அறிகிறோம். மேலும், எம்பெருமான் ராஜகுமாரனைப் போலேயும், ஸேனை முதலியார் மூத்த அமைச்சராகவும் பேசப் படுவதை நாம் கேள்விப்படுகிறோம்.

ஸ்தோத்ர ரத்னம் என்ற ப்ரபந்தத்தில், 42-ஆவது ச்லோகத்தில், எம்பெருமானுக்கும் ஸேனை முதலியாருக்கும் உண்டான ஸம்பந்தம் சொல்லப்பட்டிருக்கிறது.

த்வதீய புக்த உஜ்ஜித ஸேஷ போஜிநா
த்வயா நிஸ்ருஷ்ட ஆத்ம பரேண யத்யதா
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி
தத் ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை:

இந்த ச்லோகத்தில், ஆளவந்தார் எம்பெருமானிடம் ஸேனை முதலியாரைப் பற்றிப் போற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது.

அர்த்தம்:

விஷ்வக்ஸேனரே உமது சேஷ ப்ரசாதத்தை முதலில் கொள்பவராகவும்,
உம்மால் நித்ய லீலா விபூதி சாம்ராஜ்யத்தை நடத்த அனுமதி கொடுக்கப்பெற்றவரும்,
எல்லோராலும் விரும்பப்படுபவருமான அவர், உம்முடைய பார்வைக் கடாக்ஷத்தாலேயே எல்லா காரியங்களையும் செவ்வனே செய்து முடிப்பவராக உள்ளார். எம்பெருமான் திருவள்ளத்தில் நினைப்பதை உணர்ந்து அதைச் செவ்வனே செய்யக்கூடியவராக இருப்பவர்.

ஸேனை முதலியாரின் தனியன்:

ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விஸ்வசித சிந்நயநாதிகாரம்
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ஸ்ரியாம

நாமும் அவ்வெம்பெருமானிடம் உண்மையான பக்தியுடன் இருப்பதற்கு ஸேனை முதலியாரை ப்ரார்தித்துக் கொள்வோம்.

அடுத்த பதிவில் ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்று போற்றப்படும் நம்மாழ்வாரை தரிசிப்போம்.

அடியேன் வேங்கடேஷ் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/08/18/senai-mudhaliar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Advertisements

திவ்ய தம்பதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

கீழே நாம் குருபரம்பரையின் முன்னுரையைப் பார்த்தோம் (https://guruparamparaitamil.wordpress.com/2015/03/14/introduction-2/). மேலே ஒராண்வழி ஆசார்ய பரம்பரையை பற்றி தெரிந்து கொள்வோம்.

periyaperumAL

    ஒராண்வழி என்றால் ஒர் ஆசார்யன் தன் சிஷ்யனுக்கும், அந்த சிஷ்யனே பின்னாளில் ஆசார்யனாய் அவருடைய சிஷ்யனுக்கு என்று தொடர்ச்சியாக உண்மையான ஞானத்தை போதித்து வருவது. இங்கு உண்மையான ஞானம் என்று குறிப்பது பூர்வாசார்யர்கள் கருணையோடு நமக்காகவே அருளிச்செய்த ரஹஸ்ய த்ரயம் என்பதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

பெரிய பெருமாள்:

திருநக்ஷத்ரம்: ஆவணி, ரோஹிணி

அருளிய சாஸ்த்ரம்: பகவத் கீதை, ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தனியன்

எம்பெருமான் தன்னுடைய எல்லையில்லாத கருணையாலே, இந்த ஒராண்வழி ஆசார்ய பரம்பரையில், தானே ப்ரதமாசார்யனாக வரித்து பெரிய பிராட்டியாருக்கு ரஹஸ்ய த்ரயத்தை உபதேசித்தருள்கிறான்.

சாஸ்த்ரம் எம்பெருமானை நிரங்குச ஸ்வதந்த்ரன், ஸர்வசக்தன், ஸர்வஜ்ஞன், ஸர்வவ்யாபகன் என்று பலவாறாக அவனுடைய கல்யாண குணங்களை கோஷிக்கிறது. நிரங்குச என்றால் எத்தாலும் நிறுத்தவோ தடுக்கவோ முடியாது என்று பொருள். இந்த ஸத்குணங்களும் ஸ்வாதந்த்ரியமுமே தன்னைச் சரணடைந்தவர்களுக்கு மோக்ஷம் கொடுப்பதற்கு ஹேதுவாகிறது.

நாராயண பரம் ப்ரம்ம தத்வம் நாராயண: பர:” என்று சாஸ்த்ரம் அறிவித்த அந்த பரம்பொருள் நாராயணனே, பெரிய பெருமாளாக ஸ்ரீரங்க விமானத்துடன், ப்ரம்மா வழிபடுவதற்காக ஸத்யலோகம் வந்தடைந்தார். பிறகு இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த ரகுகுல மன்னர்கள் வழிபடுவதற்காக அயோத்தி வந்தடைந்தார். இராவண வதம் முடிந்து, சீதா ராம பட்டாபிஷேகம் முடிந்து விபீஷணன் இலங்கை திரும்பும் சமயத்தில், இராமன் தன் திருவாராதன பெருமாளான பெரிய பெருமாளை விபீஷணனுக்கு கொடுத்தான். விபீஷணன் திரும்பிச் செல்லும் வழியில் ஸ்ரீரங்கத்தில் சந்தியாவந்தனம் செய்வதற்காக ஸ்ரீரங்க விமானத்தை நிலத்தில் வைக்க, “வண்டினமுரலும் சோலை மயிலினமாலும் சோலை கொண்டல் மீதனவும் சோலை
குயிலினம் கூவும் சோலை” (திருமாலை) என்று ஸ்ரீரங்க அழகிலே திளைத்து எம்பெருமான் அங்கேயே தெற்கு நோக்கி எழுந்தருளினான்.

பெரிய பெருமாள் தனியன்:

ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

பெரிய பிராட்டியார்

periyapirAttiyAr

திருநக்ஷத்ரம்: பங்குனி, உத்ரம்

ரஹஸ்ய த்ரயத்தில் இரண்டாம் ரஹஸ்யமான த்வய மஹாமந்த்ரத்தை எம்பெருமான் விஷ்ணு லோகத்தில் பெரிய பிராட்டியாருக்கு உபதேசித்தார். சம்சாரப் பெருங்கடலிலே விழுந்து வெளியேறத் தெரியாமல் தவிக்கும் ஜீவனிடம் காருண்யம், தன் ப்ரயோஜனம் என்றில்லாமல் எம்பெருமானின் ப்ரயோஜனத்திற்காகவே இருக்கும் பாரதந்த்ரியம், எம்பெருமான் ஒருவனுக்கே ஆட்பட்டிருக்கும் தன்மையான அநந்யார்ஹ சேஷத்வம் போன்ற ஆசார்யனுக்கே உரித்தான முக்கியமான ஸத்குணங்கள் நிரம்பப்பெற்ற பெரிய பிராட்டியாரே இந்த குருபரம்பரையின் இரண்டாம் ஆசார்யராக போற்றப்படுகிறாள். மற்ற ஆசார்யர்களுக்கு இவளே முன்னுதாரணமாக இருந்து வழிகாட்டுகிறாள்.

சீதா பிராட்டியாக அவதரித்து இராமனை பிரிந்த போது கீழே கூறிய மூன்று குணங்களை பெரிய பிராட்டியார் வெளிப்படுத்தியருளியதை பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீவசந பூஷணத்தில் விளக்கியுள்ளார். அவற்றை மேலே காண்போம்.

  • முதல் முறையாக இராவணன் சீதையை கவர்ந்து செல்லும்போது தனது கருணையால் அதை அனுமதிக்கிறாள். லோகமாதாவான அவள் இலங்கை சென்றால் மட்டுமே தேவர்களின் மஹிஷிகளை காப்பாற்ற முடியும் என்கிற காரணத்தினால்.
  • பட்டாபிஷேகம் ஆன பின்பு, தன் நாட்டுப் ப்ரஜைகளின் பேச்சால் கர்ப்பவதியான சீதையை காட்டிற்கு அனுப்பினான் இராமன். அப்போதும் எம்பெருமான் கட்டளைப்படி காட்டிற்குச் சென்று தான் பரதந்த்ரன், அவன் ப்ரயோஜனத்திற்காகவே இருப்பதைக் காட்டினாள்.
  • லவ குசர்களைப் பெற்றபின், வநவாசம் முடிந்து இராமனை முழுவதுமாக பிரிந்து பரமபதம் செல்லும்போது தன் அநந்யார்ஹ சேஷத்வத்தை, அதாவது, எம்பெருமான் ஒருவனுக்கே ஆட்பட்டிருக்கும் தன்மையைக் காட்டினாள்.

இப்படியாக ஓர் ஆசார்யனுக்கு உண்டான முக்கியமான குணங்களுடன் நம்மிடையே இருந்து வாழ்ந்து காட்டினாள்.

பெரிய பிராட்டியாரின் தனியன்

நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

அடுத்த பதிவில் சேனை முதலியாரை (விஷ்வக்சேனர்) தரிசிப்போம்.

அடியேன் வேங்கடேஷ் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/08/17/divya-dhampathi/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

முன்னுரை (தொடர்ச்சி)

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/03/13/introduction/), நாம் நம்முடைய குருபரம்பரையைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தொடங்கினோம். periya perumaal azhwar-acharyas-ramanuja ச்ரிய:பதியான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி மற்றும் எண்ணிலடங்காத திவ்ய மஹிஷிகளுடனும் அநந்தன் கருடன் விஷ்வக்ஸேனர் முதலிய நித்ய ஸூரிகளுடனும் முக்தர்களுடனும் எண்ணிலடங்காத கல்யாண குணங்களை உடையவனாகவும் விளங்குகிறான். ஸ்ரீவைகுண்டம் என்கிற பரம்பதம் எல்லையில்லாத இன்பங்களை உள்ளடக்கியுள்ள இடம். ஆனால் எம்பெருமான் அங்கு ஆனந்தித்து இருக்கும்போதும், அவன் திருவுள்ளம் ஸம்ஸாரத்தில் துன்புறும் ஜீவாத்மாக்களையே எண்ணுகிறது. நித்யர் (ஸம்ஸாரத்தில் கர்மத்தால் ஒருபொழுதும் தள்ளப் படாதவர்கள்), முக்தர் (ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்டவர்கள்), பத்தர் (ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டுள்ளவர்கள்) ஆகிய மூன்று விதமான ஜீவாத்மாக்களும் எம்பெருமானிடம் பிதா-புத்ர ஸம்பந்தமும்,  உடையவன்-உடைமைப் பொருள் என்கிற ஸம்பந்தமும் பெற்று எம்பெருமானுக்குக் கீழ்ப்படிந்து இருக்கும் தன்மையைப் பெற்றவர்களே. இந்த ஸம்பந்தத்தின் காரணமாகவே, எம்பெருமான், பத்த ஜீவாத்மாக்களை ஸ்ரீவைகுண்டத்திற்குக் அழைத்துச் சென்று நிரந்தரமான கைங்கர்யத்தில் ஈடுபடுத்தத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறான். சாஸ்த்ரம் விளக்கும்படி ஒருவனுக்குத் தத்துவங்களைப் பற்றிய உண்மை அறிவு இருக்குமே ஆனால் அவன் மோக்ஷத்தை அடைகிறான். ரஹஸ்ய த்ரயத்தின் மூலமாக அத்தகைய உண்மை அறிவைத் தெளிவாக அடையலாம். ஜீவாத்மாவை இந்த ஸம்ஸாரத்தில் இருந்து விடுவித்து மோக்ஷத்துக்கு வழிகாட்டும் ரஹஸ்ய த்ரயத்தை உபதேசிப்பவன் ஆசார்யன். இந்த ஆசார்யன் என்னும் நிலையின் ஏற்றத்தை உணர்ந்தே எம்பெருமானும் ஆசார்யனாக இருக்க விரும்புகிறான்.  ஆகையாலேயே எம்பெருமானே நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் ப்ரதமாசார்யனாகத் திகழ்கிறான். எம்பெருமான் தானே ஆசார்யனாக மூன்று இடத்தில் நின்றுள்ளதை நம்முடைய பூர்வாசார்யர்கள் விளக்கியுள்ளனர்:

  • எம்பெருமான் பதரிகாச்ரமத்தில் தானே நாராயண ரிஷியாக அவதரித்து திருமந்திரத்தைத் தன்னுடைய அம்ஸமான நர ரிஷிக்கு உபதேசித்தான்.
  • ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் எம்பெருமான் த்வய மஹா மந்திரத்தை ஸ்ரீமஹாலக்ஷ்மியாகிய பெரிய பிராட்டியாருக்கு உபதேசித்து நம்முடைய குருபரம்பரையைத் தொடங்கிவைத்தான்.
  • எம்பெருமான் பார்த்தஸாரதியாக, குருக்ஷேத்திரத்தில் திருத்தேர்த்தட்டில் அர்ஜுனனுக்கு சரம ச்லோகத்தை உபதேசித்தான்.

குருபரம்பரை சித்திர வடிவில்: http://kaarimaaran.com/downloads/guruparambarai.jpg. திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாளும் பெரியபிராட்டியாரும் ஸ்ரீமந் நராயணனும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுமே. ஆகையால், பெரிய பெருமாள் தொடக்கமாக, நம்முடைய ஓராண் வழி குருபரம்பரை இந்த வரிசையில் உள்ளது:

  1. பெரிய பெருமாள்
  2. பெரிய பிராட்டியார்
  3. ஸேனை முதலியார்
  4. நம்மாழ்வார்
  5. நாதமுனிகள்
  6. உய்யக்கொண்டார்
  7. மணக்கால் நம்பி
  8. ஆளவந்தார்
  9. பெரிய நம்பி
  10. எம்பெருமானார்
  11. எம்பார்
  12. பட்டர்
  13. நஞ்சீயர்
  14. நம்பிள்ளை
  15. வடக்கு திருவீதிப் பிள்ளை
  16. பிள்ளை லோகாசார்யர்
  17. திருவாய்மொழிப் பிள்ளை
  18. அழகிய மணவாள மாமுனிகள்

ஆழ்வார்களும் மேலும் பல ஆசார்யர்களும் ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் அமைந்துள்ளார்கள். ஆழ்வார்கள் வரிசை க்ரமத்தில்:

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசை ஆழ்வார்
  5. மதுரகவி ஆழ்வார்
  6. நம்மாழ்வார்
  7. குலசேகராழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கை ஆழ்வார்

ஓராண் வழியில் இல்லாத ஏனைய ஆசார்யர்கள் (மேலும் பலர் உள்ளனர்):

  1. செல்வ நம்பி
  2. குருகைக் காவலப்பன்
  3. திருக்கண்ணமங்கை ஆண்டான்
  4. திருவரங்கப்பெருமாள் அரையர்
  5. திருக்கோஷ்டியூர் நம்பி
  6. பெரிய திருமலை நம்பி
  7. திருமாலை ஆண்டான்
  8. திருக்கச்சி நம்பி
  9. மாறனேரி நம்பி
  10. கூரத்தாழ்வான்
  11. முதலியாண்டான்
  12. அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
  13. கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான்
  14. கிடாம்பி ஆச்சான்
  15. வடுக நம்பி
  16. வங்கிபுரத்து நம்பி
  17. சோமாசியாண்டான்
  18. பிள்ளை உறங்கா வில்லி தாஸர்
  19. திருக்குருகைப்பிரான் பிள்ளான்
  20. கூர நாராயண ஜீயர்
  21. எங்களாழ்வான்
  22. அநந்தாழ்வான்
  23. திருவரங்கத்து அமுதனார்
  24. நடாதூர் அம்மாள்
  25. வேத வ்யாஸ பட்டர்
  26. ச்ருத ப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன ஸூரி)
  27. பெரியவாச்சான் பிள்ளை
  28. ஈயுண்ணி மாதவப் பெருமாள் (நம்பிள்ளையின் ஈடு மஹா வ்யாக்யானத்தின் சரித்திரத்தையும் உள்ளடக்கியது)
  29. ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள்
  30. நாலூர் பிள்ளை
  31. நாலூராச்சான் பிள்ளை
  32. நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்
  33. பின்பழகிய பெருமாள் ஜீயர்
  34. அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
  35. நாயனாராச்சான் பிள்ளை
  36. வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்
  37. கூர குலோத்தம தாஸர்
  38. விளாஞ்சோலைப் பிள்ளை
  39. வேதாந்தாசார்யர்
  40. திருநாராயணபுரத்து ஆய் ஜநந்யாசார்யர்

மாமுனிகள் காலத்திலும், அவருக்கு பிற்பட்ட காலங்களிலும் பல சிறந்த ஆசார்யர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் (மேலும் பலர் உள்ளனர்):

  1. பொன்னடிக்கால் ஜீயர்
  2. கோயில் கந்தாடை அண்ணன்
  3. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்
  4. பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்
  5. எறும்பியப்பா
  6. அப்பிள்ளை
  7. அப்பிள்ளார்
  8. கோயில் கந்தாடை அப்பன்
  9. ஸ்ரீபெரும்பூதூர் ஆதி யதிராஜ ஜீயர்
  10. அப்பாச்சியாரண்ணா
  11. பிள்ளை லோகம் ஜீயர்
  12. திருமழிசை அண்ணாவப்பங்கார்
  13. அப்பன் திருவேங்கட ராமாநுஜ எம்பார் ஜீயர்

மேல் வரும் பதிவுகளில், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களைப் பற்றி முடிந்த அளவு அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/08/17/introduction-contd/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

முன்னுரை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

ஸ்ரீமந் நாராயணன் தொடக்கமாகவும் நாதமுனி மற்றும் ஆளவந்தாரை நடுவாகவும் என்னுடைய ஆசார்யனை ஈறாகவும் கொண்டுள்ள சீரிய குருபரம்பரையை நான் வணங்குகிறேன். நம்முடைய குருபரம்பரையைக் கொண்டாடும் இந்த திவ்யமான ச்லோகம் கூரத்தாழ்வானால் அருளப்பட்டது. அவருக்கு அஸ்மதாசார்ய என்னும் பதம் அவருடைய ஆசார்யனான எம்பெருமானாரைக் குறிக்கும். ஆனால் பொதுவாக, இந்தச் சொல், இந்த ச்லோகத்தைச் சேவிப்பவரின் ஆசார்யனைக் குறிக்கும்.

மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் காட்டியுள்ளபடி நம் தரிசனம் “எம்பெருமானார் தரிசனம்” என்றே வழங்கப்படுகிறது. எம்பெருமானாரே, அவருடைய வாழ்நாளில், ஸநாதன தர்மத்தைச் சிறந்து விளங்கச் செய்தார். தன்னுடைய முன்னோர்களான நாதமுனி, ஆளவந்தார் போன்றோரின் உபதேச மொழிகளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக விளக்கினார்.

குரு மற்றும் ஆசார்யன் என்கிற சொற்கள் பர்யாய பதங்கள். குரு என்றல் அஜ்ஞானத்தை போக்குபவர் என்று பொருள். ஆசார்யன் என்றால் சாஸ்த்ரத்தை நன்கு கற்று, அதை தான் அனுஷ்டித்து மற்றவர்களையும் அனுஷ்டிக்கச் செய்பவர் என்று பொருள். குருபரம்பரை என்பது அப்படிப்பட்ட ஆசார்யர்கள் தொடர்ந்து வழி வழியாக அமைந்து இருத்தல். கீழே லக்ஷ்மீநாத ச்லோகத்தில் பார்த்தபடிக்கு, நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை, ஸ்ரீமந் நாராயணனாலேயே தொடங்கப்பட்டதாக உள்ளது. ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய எல்லையில்லாத கருணையால் தானே இந்த ஸம்ஸாரத்தில் கட்டுண்டு இருக்கும் ஜீவாத்மாக்களின் அஜ்ஞானத்தைப் போக்கி, அவர்களுக்குப் பரமபதத்தில் அந்தமில்லாத பேரின்பத்தை அளிக்கிறான். ஆகையால் அவனே நம்முடைய குருபரம்பரையில் ப்ரதமாசார்யனாக விளங்கி சாஸ்த்ரத்தின் சீரிய அர்த்தங்களை வெளியிடுகிறான்.

தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷ லாப:” என்கிறது சாஸ்த்ரம். நாம் உண்மையான ஞானத்தைப் பெற்று மோக்ஷம் அடைகிறோம். நாம் அறியும் உண்மை விஷயங்கள் அனைத்தையும், இந்த இடைவிடாத குருபரம்பரையில் உள்ள ஆசார்யர்கள் மூலமாகவே அறிந்துள்ளோம். ஆகையால் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதும் அவர்கள் வாழ்வையும் உபதேசங்களையும் பேசிக் கொண்டு இருப்பதும் நமக்கு மிகவும் அவசியாமாகிறது.

இது பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய 6000 படி குருபரம்பரா ப்ரபாவம், பிள்ளை லோகம் ஜீயர் அருளிய யதீந்த்ர ப்ரவணப் ப்ரபாவம் மற்றும் ஏனைய பூர்வாசார்ய க்ரந்தங்களைக் கொண்டு நம்முடைய குருபரம்பரையைப் பற்றி விவரிக்க ஒரு சிறு முயற்சி.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/08/16/introduction/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org